Connect with us
venkat prabu

latest news

அஜித், விஜயை வச்சி படமெடுத்தும் வீணாப்போச்சே!.. வெங்கட் பிரபு நிலமை ஐயோ பாவம்!..

Venkat Prabu: சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதன்பின் சில படங்களை இயக்கினாலும் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா அவரை கவனிக்க வைத்தது. ஆனால, தனது அவசரகுடுக்கை தனத்தால் பல நல்ல வாய்ப்புகளை வெங்கட்பிரபு இழந்திருக்கிறார். மங்காத்தாவுக்கு பின் தனது அப்பா கங்கை அமரன் சொன்ன ஒரு கதையை டெவலப் செய்து அஜித் விஜய் இருவ்ரையும் வைத்து படமெடுக்க முயற்சி செய்தார் வெங்கட் பிரபு.

இப்போது இதை வெளியே சொல்ல வேண்டாம் என அஜித் சொல்லியும் கேட்காமல் ஏதோ ஊடகம் ஒன்றில் அதைபற்றி பேசிவிட்டார். அதேபோல் அஜித், விஜய் இருவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பகிர்ந்தது அஜித்துக்கு பிடிக்கவில்லை. எனவே மங்காத்தாவிற்கு பின் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவே இல்லை.

venkat
#image_title

அஜித் இல்லை என்றால் விஜய் பக்கம் போவோம் என சில வருடங்கள் முயற்சி செய்து அவரை வைத்து கோட் படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. கோட் படத்திற்கு முன்பு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் அந்த படம் துவங்குவதற்கு தாமதமானது. அதோடு விஜய் பட வாய்ப்பு வரவே ‘நீங்கள் விஜய் படத்தை முடித்து விட்டு வாருங்கள்’ என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெங்கட் பிரபுவை அனுப்பி வைத்தது.

ஆனால் அமரனுக்கு பின் சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் மாறிவிட அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பலமுறை பேசி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். மதராஸி, பராசக்தி ஆகிய படங்களுக்கு பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் என திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan
sivakarthikeyan

இந்த படத்தை இயக்க 20 கோடி சம்பளம் கேட்கிறார் வெங்கட் பிரபு. ஆனால் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனமோ 7 கோடி முதல் 10 கோடி வரை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறது. ‘நான் விஜய் வைத்து படம் எடுத்தவன்.. எனக்கு 20 கோடி கொடுத்தால் என்ன?’ என வெங்கட் பிரபுவும் ‘நீங்கள் விஜய் படம் எடுப்பதற்கு நாங்கள் விட்டு கொடுத்ததுதான் காரணம்’ என தயாரிப்பு நிறுவனமும் சொல்ல பேச்சுவார்த்தை முடிந்தபாடில்லை.

எனவே குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று விட்டார் வெங்கட் பிரபு. இருவரும் பேசி முடிவெடுத்து 15 கோடியில் வந்து நின்றால் வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படம் டேக் ஆப் ஆகும் என்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!.

Continue Reading

More in latest news

To Top