வெங்கட் பிரபுவுக்கே கெட் அவுட் சொன்ன பிரபல ஹீரோக்கள்… என்ன இப்படி ஆகிப்போச்சு?

தமிழக முதல்வர் விஜயின் கடைசி இயக்குனருக்கே தற்போது ஹீரோ கிடைக்காமல் அல்லாடி வருகிறார். 
 
venkat prabhu

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் வெங்கட் பிரபு. பெரிய அளவில் காமெடியாகவும் வித்தியாசமான ட்விஸ்ட் உடனும் படம் எடுப்பதில் இவர் கில்லாடி என்ற பெயரே இருந்தது. ஆனால் தற்போது இவருக்கே பெரிய சிக்கல் பிறந்துள்ளது. 

வெங்கட் பிரபுவின் கடைசி படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். தற்போதைய முதல்வர் விஜயின் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் இதுதான். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் படம் பெரிய விமர்சன தோல்வியையே அடைந்தது. 

இதனால் வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோவான சிவகார்த்திகேயன் ஆடி போனார். இது சரிப்பட்டு வராது என நினைத்து கழண்டு கொண்டார். அவர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருவதால் வெங்கட் பிரபுவுக்கு இன்னும் வாய்ப்பில்லை.

சரி அடுத்த ஹீரோவுக்கு போகலாம் என்ற ரீதியில் பிரதீப் ரங்கநாதனிடம் பேச்சு வார்த்தை நடத்த அவர் பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து கென் கருணாஸிடம் கதை சொல்ல செல்ல அவரும் ஸ்கிரிப்ட் கேட்டு இருக்கிறார். 

இந்த பழக்கம் இல்லாத வெங்கட் பிரபு தற்போது டம்மி ஸ்கிரிப்டுடன் அடுத்த ஹீரோ அலசலில் இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனத்திடம் ஆறு மாதத்தில் படத்தினை முடித்து தருகிறேன். அதுவரை மாதம் ஐம்பது லட்சம் வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். 

இன்னும் ஒன்னுமே தொடங்கலை அதுக்குள்ளையா என்ற ரீதியில் தயாரிப்பு நிறுவனமும் படமே வேண்டாம் என எஸ்கேப் ஆகிவிட்டதாம். முதல்வரின் கடைசி இயக்குனருக்கே இந்த நிலையா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

From Around the web