இயக்குநராக 20 ஆண்டுகள்... நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, இயக்குநராக தனது 20 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளார். 
 
venkat prabhu

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, இயக்குநராக தனது 20 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளார். 

சென்னை 28 படம் மூலம் இயக்குனர்ராக அறிமுகம் ஆனவர் வெங்கட் பிரபு. முன்னதாக ஓரிரு படங்களில் நாயகனாகவும் , சில படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் பெரிதாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. சென்னை 28 படம்தான் அவரை திரையுலகில் அடையாளப்படுத்தியது. இதையடுத்து சரோஜா, கோவா, அஜித்துடன் மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி மற்ர்றும் விஜயுடன் கோட் உள்ளிட்ட 14 படங்களை இயக்கியுள்ளார். இத்ல் மங்காத்தா, மாநாடு மற்ற்ரும் கோட் ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. மற்ற படங்களும் ஓரளவிகு வரவேற்பு பெற்றன.

venkat prabhu

இந்த நிலையில் தான் இயக்குனராகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சமூக வலைதளத்தில் அவர் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மறக்க முடியாத நினைவுகளால் என் மனம் நிரம்பி இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணம் இன்னும் தொடர்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வெங்கட் பிரபுவுக்கு நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

From Around the web