
Cinema News
Goat: கோட் படத்தில் இருக்கும் ஒரே வருத்தம்.. இப்போ ஃபீல் பண்ணி பேசி என்ன பண்ண VP?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தி கோட். இந்த படத்தில் விஜயை டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் மிகவும் இளமையாக காட்டியிருப்பார்கள். அதைப் போல ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்திருந்தார்கள். ஏற்கனவே வெங்கட் பிரபு அஜித் கூட்டணியில் உருவான மங்காத்தா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அதனால் விஜய் ரசிகர்களும் மங்காத்தா திரைப்படத்தை விட ஒரு பெரிய வெற்றியை கோட்படத்தின் மூலம் விஜய்க்கு கொடுக்க வேண்டும் என ஆர்வமுடன் காத்திருந்தார்கள். படம் அந்த அளவுக்கு இல்லை என்றாலும் படத்தில் அஜித் ரெஃபரன்ஸ் தோனியின் சில காட்சிகள் என ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் வைத்தார் வெங்கட் பிரபு. அது இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். படத்தின் காட்சிகளைப் பொருத்தவரைக்கும் மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் தான் இருந்தன. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழை வழங்கியது. ஸ்பை ஆக்சன் திரில்லர் பின்னணியில் உருவான இந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் சயின்ஸ் பிக்சன் என படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
இதில் குழந்தை கடத்தல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் பிரபுதேவா அஜ்மல் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் வெங்கட் பிரபு கோட் படம் குறித்து அவருடைய கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.
கூடவே அந்த படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனாவும் உடன் இருந்தார். அதாவது முதலில் இந்த படத்தை ஹாங்காங்கில் எடுக்க திட்டமிட்டு இருந்தார்களாம். குழந்தை கடத்தல் காட்சியை ஹாங்காங்கில் தான் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தாராம். அதன் பிறகு அந்த குழந்தையை மீட்பது தொடர்பான காட்சியை துருக்கியில் எடுக்கலாம் என நினைத்தார்களாம்.
ஆனால் படத்தின் பட்ஜெட் கருதி ரஷ்யாவில் பிளான் பண்ணோம் என வெங்கட் பிரபு கூறினார். அது மட்டுமல்ல இந்த படத்திற்காக அடிக்கடி வெளிநாடு சென்று விட்டேன் .அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட ஐந்து முறை சென்று விட்டதாக வெங்கட் பிரபு கூறினார். இந்த படத்தில் எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்னவெனில் போஸ்ட் ப்ரொடக்ஷனில் கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஏனெனில் தயாரிப்பு தரப்பில் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள் .அதற்குள் எல்லாம் முடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் தான் நான் இருந்தேன். அதனால் போஸ்ட் ப்ரொடக்ஷனில் நேரம் கொடுத்திருந்தால் எனக்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். இதுதான் என்னுடைய வருத்தம் என அந்த விழாவில் வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.