டிராப்பானது சிவகார்த்திகேயன் படம்... மீண்டும் 'சென்னை 28' டீமுடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது படங்களுக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'.
இதில் ஹீரோவாக தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு டைம் டிராவல் படம் எடுக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், பட்ஜெட் காரணமாக இப்படம் டிராப்பானது. அதன் பிறகு கென் கருணாஸ், பிரதீப் ரங்கநாதன், தனுஷ் ஆகியோருடன் வெங்கட் பிரபு கைகோர்க்கப்போவதாக வாரத்துக்கு ஒரு செய்தி வந்த வண்ணமிருந்தது.
தற்போது, வெங்கட் பிரபு இயக்கப்போகும் புதிய படத்தில் நடிகர்கள் ஜெய், மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை 'டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஏற்கனவே, ஜெய், மிர்ச்சி சிவா இருவருமே வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 600028 1 & 2'-வில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
