சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..
விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி 400 கோடி வசூல் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இன்னமும் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்ஷன் எடுக்கலாம் என அமெரிக்காவுக்கு எல்லாம் போய் வேலை பார்த்தார்.
ஆனால், பெரிய பட்ஜெட் படம் இப்போதைக்கு வேண்டாம் நான் சேஃப்டி ஜோனில் சேயோன் படம் பண்ணுறேன் என சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் தாய் கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.
துப்பாக்கி கொடுத்த டைரக்டருக்கு டாட்டா காட்டியது தான் மிச்சம். இதற்கு மேல் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான்.
சிவகார்த்திகேயன் போனால் என்ன அந்த சயின்ஸ் ஃபிக்ஷனை பிரதீப் ரங்கநாதனை வைத்து பண்ணலாமே என லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் வெற்றிக்கு காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு விக்னேஷ் சிவன் பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என இருவருமே வேண்டாம். யூத் படத்தை இயக்கி 80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய கென் கருணாஸை வைத்து தனது ஸ்டைலில் இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்து பார்ட்டி கொண்டாடலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டார் என்கின்றனர். வெற்றிமாறன் படத்தை சீக்கிரமே முடித்து விட்டு கென் கருணாஸ் வெங்கட் பிரபு பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
