Categories: Cinema News latest news

எல்லாரும் ‘அந்த’ விஷயத்தை பத்தி மட்டும் தான் கேக்குறாங்க.! கடுப்பான வெங்கட் பிரபு.!

இயக்குனர் வெங்கட் பிரபு, இவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மக்களை என்டேர்டைன் செய்யும் விதமாக இருக்கும். சென்னை 28 , கோவா, சரோஜா, மங்காத்தா , மாநாடு என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம்.

இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் மன்மதலீலை. இந்த திரைப்படம் பக்கா அடல்ட் காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது.  இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் , ரீமா, சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிர்தி வெங்கட் என பலர் நடித்துள்ளனர். ப்ரேம் ஜி இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக இருந்துள்ளார்.

பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்களை விட அதற்கு கீழே அவர் போடும் டேக் லைனை தான் ரசிகர்கள் விரும்பி பார்பார்கள். இதில் எந்த மாதிரியான டேக் லைனை அவர் உபயோகித்து உள்ளார் என யோசிக்க ஆரம்பித்து விடுவார்.

இதையும் படியுங்களேன் – 55 நாள் நான் குளிக்கவே இல்ல.! ஓடாத விஜய் சேதுபதி படத்துக்கா இவ்ளோ கஷ்டம்.?!

வெங்கட் பிரபு ஹாலிடே, வெங்கட் பிரபு கேம், வெங்கட் பிரபு டயட், வெங்கட் பிரபு பாலிடிக்ஸ் , வெங்கட் பிரபு குயிக்கி என வித்தியாசமாக அந்த படம்  எதனை குறிக்கிறதோ அதனை வைத்து விடுவார். அதனால் பலரும்அவரின் அடுத்த பட தலைப்பை கேட்பதை விட சார் அடுத்த படத்திற்கு என்ன டேக் லைன் என்றே கேட்கின்றனராம்.

அதனால், அவர் சில நேரம் கடுப்பாகி, நான் தலைப்பே வைக்கல அதுக்குள்ள டேக் லைனா என கேட்டுவிடுவாராம். அந்த டேக் லைன்களை சில சமயம் அவரோ, அல்லது அவரது உதவி இயக்குநர்களோ யோசித்து வைப்பார்கலாம்.

Manikandan
Published by
Manikandan