Categories: Cinema News latest news

யுவன் இசை போர் அடித்துவிட்டதா.?! தொடர்ந்து இளையராஜாவுக்கு குவியும் வாய்ப்புகள்…

மாநாடு, மன்மத லீலை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து தமிழ் ஹீரோ உடன் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கையில், வண்டியை தெலுங்கு பக்கம் திருப்பி அதிர்ச்சி கொடுத்துவிட்டார் வெங்கட் பிரபு.

இவர் அடுத்தது, தெலுங்கு இளம் நடிகர் நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது ஒரு பீரியட் படம் (பழைய காலகட்ட படம் ) என கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்க உள்ளது எனவும் கூறப்படுகிறது. முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது அதில், இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் சேர்ந்து இசையமைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வெங்கட் பிரபு படங்களுக்கு பெரும்பாலும் யுவன் தான் இசையமைப்பார். சமீப காலமாக யுவனின் இசை பெரிய அளவில் சோபிக்க வில்லை. மாநாடு படம் மட்டும் நன்றாக அமைந்தது. வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவு யுவன் இசை இல்லை என்பதே கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்களேன்  – என் விவாகரத்துக்கு இதுதான் காரணம்.! சமந்தா அதிரடி.! தலையை பிய்த்து கொள்ளும் ரசிகர்கள்….

மாமனிதன் படத்திற்கும் இதே போல யுவன் – இளையராஜா சேர்ந்து தான் இசையமைத்தனர். தற்போது மீண்டும் யுவன் – இளையராஜா இசையமைக்க தொடங்கியுள்ளதால், யுவன் இசை போரடித்து விட்டதா? எதற்காக இளையராஜாவையும் சேர்த்து இசையமைக்க வைக்கிறார்கள் என பலவாறு கேள்விகள் எழுந்துள்ளளது.

Manikandan
Published by
Manikandan