Categories: Cinema News latest news

மன்மதலீலைகளால் பறிபோகும் வாய்ப்புகள்.! அக்கட தேசத்தில் தஞ்சமடைந்த வெங்கட் பிரபு.!

மங்காத்தா படத்திற்கு பிறகு ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருந்த இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு மிக பெரிய ஹிட்டை கொடுத்த திரைப்படம் மாநாடு. இந்த படம் தான் சமீபத்தில் 100 நாட்களை கடந்து திரையில் ஓடும் திரைப்படமாக உருவெடுத்து வருகிறது. சில வருடங்கள் கழித்து ஒரு தமிழ் திரைப்படம் 100 நாட்களை நோக்கி ஓடுவது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தை அடுத்து வெங்கட் பிரபு , அடுத்தடுத்து, பெரிய பெரிய நடிகர்களை வைத்து படமெடுப்பார் என நினைத்திருக்கையில், அடுத்து உடனே மன்மத லீலை எனும் படத்தை அசோக் செல்வனை வைத்து இயக்கி தரையுலகினார்கருக்கு ஷாக் கொடுத்தார்.

இதையும் படியுங்களேன் – பாடி தாங்காது வேணாம் அஜித் விட்ருங்க.! என்ன காரியம் செய்ய போகிறார் தெரியுமா.?! 

 

இதே போல, தான் மங்காத்தா படம் முடிந்த பிறகு கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை கொடுத்தார். அதேபோல தற்போது மாநாடு படத்திற்கு பிறகு மன்மதலீலையை களமிறங்குகிறார்.

தற்போது எந்த பெரிய நடிகருக்கும் அவர் கதை கூறவில்லையாம். மாறாக இவரும் ஷங்கர், லிங்குசாமி போல, தெலுங்கு ஹீரோக்கு கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம். இந்த படம் மாநாடு ரீமேக் கிடையாதாம். புது கதையாம். 1980 களில் நடக்கும் கதையாம். நாக சைதன்யா , பூஜா ஹெக்டே நடிக்க உள்ளனராம். விரைவில் இந்த இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan