×

மாநாடு ஓவர்... 10வது படத்திற்கு பூஜை போட்ட வெங்கட் பிரபு

மாநாடு திரைப்படம் முடிந்த கையோடு அடுத்த படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட் பிரபு

 
vp-str1052021m

வெங்கட்பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சிம்பு ஜோடியாக கல்யாணி மற்றும் எஸ்ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடி திருப்பங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முதன்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. 

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இது இவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News