தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸே நீங்க தான்!.. 7ம் தேதி, 2026ல் விஜய் சிஎம்.. வெங்கட் பிரபு சம்பவம்!..
நடந்து முடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்ற நிலையில் அவர் வருகின்ற மே 7ம் தேதி முதலமைச்சர் பதியை ஏற்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தேதி மற்றும் ஆண்டை குறீயிடாக தனது படத்தில் விஜய் முன்னதாக வைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக, நடிகர் - அரசியல்வாதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களை வென்றுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, புதிய அரசை அமைக்கும் பணிகள் வேகமடைந்துள்ளன. கூட்டணி அமைப்புகள் மற்றும் ஆதரவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், விஜய் மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், வெற்றிக்குப் பிறகு சமூக நீதி மற்றும் திராவிட சிந்தனையை வலியுறுத்தும் வகையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களுக்கு விஜய் மரியாதை செலுத்தியது அவரது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் படத்தில் இருந்த காரில் TN07CM2026 என நம்பர் ப்ளேட்டில் இருந்தது தற்போது சாத்தியமானைது தற்போது அனைவரின் பேசும் பொருளாக மாறியுள்ளது.
திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி, அப்போது சாதாரணமாக கருதப்பட்டாலும் தற்போது அதே தேதியில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், இது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை “முன்னறிவிப்பு” எனவும், சிலர் “சரியான திட்டமிடல்” எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபுவை தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ் என்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில், அரசியல் விமர்சகர்கள் இதை சாதாரண தற்செயலான பொருத்தமாகவே பார்க்கின்றனர். திரைப்படங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இணைத்து பார்க்கும் கலாச்சாரம் புதியதல்ல என்றும் அவர்கள் கூறுகின்றனர். விஜயின் இந்த வெற்றி, தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பாரம்பரிய அரசியல் அமைப்புகளுக்கு சவாலாகக் கருதப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் அவர் பெற்ற ஆதரவு, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
