Categories: Cinema News latest news

மங்காத்தா-2வை மறந்திடுங்க.! வலிமையை கழுவி ஊற்றிய வெங்கட் பிரபு.!

அஜித் நடிப்பில் கடைசியாக தியேட்டரில் வெளியான திரைப்படம் வலிமை. ரசிகர்கள் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக ஆவலுடன் காத்திருந்த திரைப்படம் இதுதான். இதுவரை இல்லாத அஜித் பட அளவுக்கு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

ஏனென்றால், தீரன் படம் எடுத்த வினோத் மீண்டும் போலீஸ் கதைக்களத்தை வைத்து அதுவும் அஜித்தை வைத்து இயக்குகிறார். அதுவும், அஜித்திற்கு மிகவும் பிடித்த பைக் ரேஸிங் மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், தியேட்டருக்கு சென்று பார்த்த ரசிகர்களுக்கு சிறுது ஏமாற்றமாகவே இருந்தது. ஏனென்றால், படத்தில் செண்டிமெண்ட் காட்சி அதிகமாக இருந்தது. அது ரசிகர்களை நெளிய வைத்துவிட்டது. அதனால், இரண்டாம் பாதியில் சில காட்சிகளை அடுத்தடுத்த நாளில் வெட்டி தூக்கும் அளவுக்கு இருந்தது.

அஜித்தை வைத்து மங்காத்தா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, இயக்கத்தில் மாநாடு திரைப்படத்திற்கு அடுத்து வெளியாகியுள்ள திரைப்படம் மன்மதலீலை. இந்த பட ப்ரோமோஷன் சமபந்தமாக வெங்கட் பிரபு ஒரு பேட்டியளித்து இருந்தார்.

இதையும் படியுங்களேன் – ம்க்கும் இதெல்லாம் நல்ல பண்ணுங்க., பீஸ்ட் குழுவை நொந்துகொள்ளும் ரசிகர்கள்.!

அதில் வலிமை திரைப்படம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘ அஜித் சார் படம் மிகவும் எதிர்பாத்தேன். அதுவும் வினோத் சார் இயக்கத்தில் அஜித் சார் நடிக்கிறார் என்றவுடனே எதிர்ப்பார்ப்பு எங்கோ இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை . மிகவும் எதிர்பார்த்தேன் அதனால் தான் இப்படி ஆகிவிட்டதோ என தெரியவில்லை. வலிமை ஓகே ‘ என தெரிவித்துவிட்டார்.

மங்காத்தா 2 கதை ரெடி, அஜித் சார் எப்போது கூப்பிட்டாலும், செய்துவிடலாம் என கூறிவந்த வெங்கட் பிரபு, வலிமை படத்தை பற்றி இப்படி கூறியுள்ளதால் மங்காத்தா 2 நடக்குமா என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். ஆனால், வெங்கட் பிரபு உண்மையைத்தான் கூறியுள்ளார் எனவும் பலர் கூறியுள்ளனர்.

Manikandan
Published by
Manikandan