Categories: Cinema News latest news

நான் பாடி ஹிட் கொடுத்த ஒரே பாடல்! – இது வெங்கட் பிரபு பாடினதா? நம்பவே முடியலயே

இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நல்ல நடிகரும் கூட. அதுமட்டுமில்லாமல் நல்ல நிறைய பாடல்களை பாடவும் செய்திருக்கிறார். தமிழில்  மங்காத்தா, சென்னை 28, கோவா, மாசிலாமணி , பிரியாணி போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் கூட தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை கூட இயக்கினார். படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் மண்ணை கவ்வியது. அதுமட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார்.

venkat1

இவர் இயக்கிய படங்களிலேயே பெருமளவு பேசப்பட்ட படங்களாக மங்காத்தா மற்றும் மாநாடு படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அடுத்ததாக விஜயை வைத்து தளபதி 68 படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க போகிறார்.அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் தமிழில் இளையராஜா, கங்கை அமரன் கம்போஸ் பண்ண பாடல்களில் ஒரு சில டிராக்குகளை சிறு வயதிலேயே வெங்கட் பிரபு பாடியிருக்கிறாராம். மேலும் எஸ்.பி.பியுடனும் பாடியிருக்கிறாராம். ஆனால் அது அந்தளவுக்கு வெளியில் தெரிவதில்லை என்று கூறிய வெங்கட் பிரபு,

venkat2

அவர் பாடிய பாடல்களிலேயே மிகவும் ஹிட் கொடுத்த ஒரே பாடல் துள்ளுவதோ இளமை படத்தில் அமைந்த ‘ நெருப்பு கூத்தடிக்குது’ பாடல் மட்டும்தானாம். அந்தப் பாடலை வெங்கட் பிரபுதான் பாடினாராம். ஆனால் அதையும் யாரும் நம்பவில்லையாம். இதை ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini