Categories: latest news throwback stories

அந்த ஒரு குத்து பாட்டு என் வாழ்க்கையவே மாத்திடிச்சி.! வெங்கட் பிரபு நீங்களா இப்டி.?!

தமிழ் சினிமாவில் சென்னை 28 திரைப்படத்தின் மூலம் நல்ல திறமையான இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதன் பிறகு சில படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து மங்காத்தா எனும் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வர தொடங்கினார்.

பின்னர் வெகு நாட்களாக ஒரு கம்பேக் கொடுக்க திட்டமிட்டிருந்த வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் மூலம் அதனை நிறைவேற்றினார். இவர் திறமையான இயக்குனர் என்பதையும் தாண்டி நல்ல பாடகர் ஆவார்.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பதால், சிறு வயது முதல் அவ்வப்போது திரைப்படம் பாடல்கள் பாடுவது, மேடை கச்சேரிகளில் என இயங்கி வந்துள்ளார். இயக்குனர் ஆவதற்கு முன்னர் பின்னணி பாடகராக இருந்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – சூர்யா ரசிகர்களை கண்டபடி திட்டிய சூரி.! பேசி சமாளிசிட்ட விட்ருவோமா.?!

அந்த சமயத்தில், இவர் வயதில் இவர் நண்பர்களாக இருக்கும், எஸ்.பி.பி.சரண்,  மற்றும் யுகேந்திரன் ஆகியோர் நண்பர்கள். அவர்கள் பாடியதில் அலையே சிற்றலையே, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய பாடல்கள் ஹிட்டாகிவிட்டன. ஆனால் வெங்கட்பிரபுவுக்கு அந்த மாதிரி ஹிட் அமையவில்லை.

அதனால், கச்சேரிகளில் குறைந்த காசு தான் வந்ததாம். அந்த நேரத்தில் தான் யுவன் இசையில், துள்ளுவதோ இளமை படத்தில்,  நெருப்பு கூத்தடிக்குது பாடல் வெங்கட் பிரபுக்கு பெரிய ஹிட்டாக அமைந்ததாம். அதன் பிறகு மேடை கச்சேரிகளில் அந்த பாட்டிற்கும், வெங்கட் பிரபுவுக்கும் நல்ல மவுசு ஏறியதாம்.

Manikandan
Published by
Manikandan