ரூம் போட்டு கவனிச்சும் நடக்கலயே!.. எஸ்.கே. பண்ண வேலையில் அப்செட்டான வெங்கட் பிரபு!..
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என எந்த மொழி சினிமாவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஹீரோவாக நடிக்கும் மார்க்கெட் உள்ள நடிகர்கள் 10 பேர்தான் இருப்பார்கள். அவர்களை சுற்றிதான் சினிமா வியாபாரம் நடக்கும். ஆனால் இயக்குனர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அதுபோக புதிதாக வாய்ப்பு தேடும் உதவி இயக்குனர்களும் இருப்பார்கள்.
இதன் காரணமாக ஒரு பெரிய இயக்குனர் கூட ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டுக்காக சில வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இதுதான் தற்போது வெங்கட் பிரபுவுக்கும் நேர்ந்திருக்கிறது.சென்னை 28, சரோஜா, கோவா போன்ற சின்ன படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து பெரிய நடிகர்களும் கவனிக்கும் இயக்குனராக மாறினார். ஆனால் அதன்பின் அவர் இயக்கிய சில படங்கள் ஓடவில்லை. பல வருடங்களாக முயற்சி செய்து விஜயை வைத்து கோட் படத்தை இயக்கினார். அந்த படமும் எதிர்பார்க்க வசூலை பெறவில்லை.
கோட் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் ஒரு படம் பேசப்பட்டது. ஆனால் கோட் படம் கலையான விமர்சனங்களை பெற்றதால் சிவகார்த்திகேயன் பின் வாங்கினார்.கோட் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பல மாதங்கள் சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்து, ஒரு வழியாக அவரின் சம்மதத்தை வாங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை என்கிறார்கள்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு 45 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கவுள்ளார். பராசக்தி படத்தை முடித்த சிவகார்த்திகேயன் டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. வெங்கட் பிரபு படத்திற்கு 2026 மார்ச் மாதம் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் கடந்த 7ம் தேதி வெங்கட் பிரபு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்காக சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது நண்பர்களுக்கு ஒரு சூப்பர் பார்ட்டியும் கொடுத்தார். அந்த பார்ட்டியில் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். தனது அடுத்த பட ஹீரோ என்பதால் சிவகார்த்திகேயனுக்கு அதே ஹோட்டலில் தனி ரூம் போட்டு கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதோடு அருகிலிருந்து அவரை சாப்பிட வைத்து அனுப்பிவிட்டு அதன்பின்னரே மற்ற நண்பர்களை கவனித்திருக்கிறார் வெங்கட் பிரபு.
இவ்வளவு செய்தும் வெங்கட்பிரபுவின் படத்திற்கு 20206 மே மாதம்தான் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனுக்காக இன்னும் பல மாதங்கள் வெங்கட் பிரபு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
