×

மாநாடு மாஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு - மரண வெயிட்டிங் தலைவா!

 

கொரோனா இடைவெளியில் தனது உடல் எடையை பாதியாக குறைத்த சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய நாளில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதோடு, அதே வேகத்தில் மாநாடு பட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். சிம்பு இதே வேகத்தில் நடித்தால் மாநாடு படம் விரைவில் முடிவடைவதோடு, வருடத்தில் 6 படத்தில் சிம்பு நடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை என சினிமா திரையுலகம் கூறுகிறது. 

மேலும், சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த சிம்பு தற்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் என எல்லாவற்றிலும் இணைந்து தன்னுடையை படங்கள் குறித்த அப்டேட்டுகளை கொடுத்து அவரின் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், மாநாடு பற்றிய முக்கிய அப்டேட் நாளை காலை 9:9 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு டிவிட் செய்துள்ளார். அநேகமாக ‘மாநாடு’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து ‘மரணம் வெயிட்டிங் தலைவா’ என சிம்பு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News