நிறைய பேரோட சாபம்!.. பிரேம்ஜி இப்படி ஆயிட்டான்!.. வெங்கட்பிரபு ஓப்பன்...

 
premji

இசைஞானி இளையரஜாவின் சகோதரரான கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. இளைய மகன் பிரேம்ஜி. வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சென்னை 28 திரைப்படம் மூலம் பிரேம்ஜியும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் ஒரு பாடகரும் கூட. ஒரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா, கோட் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் பிரேம்ஜி நடித்திருக்கிறார். வெங்கட் பிரபுவுக்கு ஒரு பெரிய நட்பு வட்டாரம் இருக்கிறது. அடிக்கடி அவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பப்புகளுக்கு செல்வது வழக்கம். ஆனால், 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பிரேம்ஜி மிகவும் நல்ல பையனாக மாறிவிட்டார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு ‘பிரேம்ஜியை பார்த்தே பல நாட்கள் ஆயிடுச்சி. இப்பலாம் அவன் வெளிய வரதே இல்ல. அப்படியே வந்தாலும் உடனே கிளம்பிடறான்.. வீட்டிலிருந்து போன் வந்தா ஒரு பாய் கூட சொல்லாம போயிடறான். நைட் 10 மணிக்கு மேல போன் பண்ணா போனை எடுக்க மாட்றான்.. யூடியூப்ல பிரேம்ஜி மாமியார் மசாலா என்று பெயர் வைத்து அவன் பண்ற டார்ச்சர் தாங்க முடியல..

இதுல கம்பெனிக்கு பிரேம்ஜி மாமியார் மசாலான்னு பேர் வச்ச்சிருக்கான். சரி வாடா ஜாலியா வெளிய போயிட்டு வரலாம்னு கூப்பிட்டா நைட் ஷூட்டிங் இருக்குன்னு சொல்றேன்.. என்ன ஷூட்டிங்னு கேட்டா பிரேம்ஜி மாமியார் மசாலா ஷூட்டிங்னு சொல்றான். கல்யாணத்துக்கு முன்னாடி எங்களை ரொம்ப டார்ச்சர் பண்ணுவான்.. நாங்க விட்ட சாபம்தான் இப்ப இப்படி மாறிட்டான்’ என ஜாலியாக பேசியிருக்கிறார்.

Tags

From Around the web