ஒருத்தரும் கிடைக்கல!.. மீண்டும் சென்னை 28-ஐ தூசி தட்டும் வெங்கட்பிரபு...
சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மூத்த மகன். தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தை வைத்து சென்னை 28 படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின் சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தை வைத்து மங்காத்தா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். எப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் கால்சீட் கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் சென்னை 28 படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்க சென்று விடுவார் வெங்கட் பிரபு. ஏற்கனவே சென்னை 28 இரண்டாம் பாகத்தை அவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 2016ம் வருடம் வெளியானது.
விஜயின் கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தது. அதற்கான வேலைகளும் வேகமாக நடந்தது. ஆனால் சில காரணங்களால் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டவில்லை. தற்போது மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்க முடியாத நிலையில் இருப்பதால் சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறாராம். விரைவில் இந்த பட வேலை துவங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடக்கவிருப்பதாக சொல்கிறார்கள்.
