Categories: Cinema News Gossips latest news

6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது.! வெங்கட் பிரபுவின் சேட்டைகள்.! பாவம்யா தயாரிப்பாளர்.!

பெரும்பாலும் சினிமாவில் படப்பிடிப்பு தளம் என்பது மிகவும் பரபரப்பாகவே இருக்கும். எவ்வளவு காமெடியான காட்சி அங்கு படமாக்கப்பட்டாலும், அந்த சூட்டிங் இடம் மிகவும் இறுக்கமாக தான் இருக்கும். இதுதான் பெரும்பாலான ஷூட்டிங் ஸ்பாட் நிலவரம்.

ஆனால், ஒரு சில இயக்குனரின் படங்கள் மட்டுமே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். அப்படி ஒரு இயக்குனர்தான் வெங்கட் பிரபு. தனது பட சூட்டிங் ஸ்பாட்டை எப்போதும் கலகலப்பாகவே வைத்திருப்பார்.

இவரை பற்றிய ஓர் அரிய தகவல் அண்மையில் வெளியானது. அதாவது இவர் எவ்வளவு பெரிய முக்கியமான காட்சியாக இருந்தாலும் சரி, எவ்வளவு காஸ்டலியான காட்சியாக இருந்தாலும் 6 மணிக்கு மேல் எந்த வேலையும் வைத்து கொள்ள மாட்டாராம் வெங்கட் பிரபு.

இதையும் படியுங்களேன் – லோகேஷை விட அதிக சம்பளம் நெல்சனுக்கு தான்.! பீஸ்ட் நிலைமையை பார்த்தும் திருந்தாத சன் பிக்ச்சர்ஸ்.!

அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் எனும் தெரிந்தாலும் 6 மணிக்கு மேல் சூட்டிங் செய்ய மாட்டார் என்று ஒரு சில சினிமாவாசிகள் கூறப்படுகிறார்கள். 6 மணிக்கு மேல் அப்படி என்ன வேலை செய்வார் என்று பார்த்தால் ,6 மணிக்கு மேல் தனது நண்பர்களுடன் பார்ட்டி மூடிற்கு மாறிவிடுவாராம். இதன் காரணமாகத்தான், 6 மணிக்கு மேல் சூட்டிங் செய்யமாட்டார் என்கிறது சினிமா வட்டாரம்.

எது எப்படியோ 6 மணிக்கு மேல் சூட்டிங் செய்தால் என்ன? செய்யாமல் இருந்தால் என்ன? அது அவர்களது மன விருப்பம். அந்த படம் மாநாடு, மங்காத்தா போல அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தால் மட்டுமே போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Manikandan
Published by
Manikandan