Connect with us
raja_main_cine

Cinema News

சொந்த விருப்பத்திற்காக நடிகையை பயன்படுத்திக் கொண்ட பழம்பெரும் இயக்குனர்!.. அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?.

தமிழ் சினிமாவிலேயே முதல் கொடை வள்ளலாக திகழ்ந்தவர் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரை பின்பற்றி வந்தவரே நடிகர் எம்ஜிஆர். சினிமாவில் என்.எஸ்.கே.கிருஷ்ணன் பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது. அந்த அளவுக்கு அவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள்.

என்.எஸ்.கே. முதலில் நடித்த படம் சதிலீலாவதி படம் தான். அது தான் எம்ஜிஆருக்கும் முதல் படம். ஆனால் என்.எஸ்.கே நடித்து முதலில் வெளியான படம் என்றால் அது மேனகா என்ற படம் ஆகும். அந்த படம் முதலில் நாடக வடிவில் தான் இருந்தது. அந்த நாடகத்தில் சாமா ஐயராக வருபவர் தான் என்.எஸ்.கே. சாம ஐயருக்கும் தாசிகமலமாக வரும் கதாபாத்திரத்திற்கு சிலபல சல்லாப காட்சிகள் அந்த நாடகத்தில் அமைந்திருக்கும்.

raja1_cine

nsk mathuram

நாடகத்தில் நடிக்கும் போது தாசிகமலமாக ஒரு ஆண் நண்பரைத்தான் நடிக்க வைத்தார்கள். ஆண் நண்பருடனே அந்த சல்லாப காட்சியில் என்.எஸ்.கே.அற்புதமாக நடித்திருப்பார். இதே காட்சியை படமாக்கினால் நடிகையுடன் அவர் நடிக்கும் காட்சி மெருகேறும் என்று எதிர்பார்த்திருந்தனர் அனைவரும்.

பழம்பெரும் இயக்குனர் ராஜா சாண்டோ என்பவர் தான் இந்த நாடகத்தை மேனகா என்ற பெயரில் படமாக்கினார். அந்த தாசிகமலம் கதாபாத்திரத்திற்கு விமலா என்ற நடிகையை நடிக்க வைத்தார். விமலா நடிகைக்கு கூடவே இரு சகோதரிகளும் இருந்தனர். அந்த மூவருடனும் ராஜா சாண்டோவுக்கு நெருக்கமான நட்பு இருந்ததாம். ஒரே நேரத்தில் அந்த மூன்று நடிகைகளுடனும் நெருக்கமான நட்புறவை பாராட்டி வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஒரே படம்.. ஃபீல்ட் அவுட்!.. விஜயின் போட்டி நடிகர்களை காலி செய்த எஸ்.ஏ.சி.. அடப்பாவமே!…

நாடகத்தில் அரங்கேற்றிய அந்த காட்சி இப்பொழுது படமாக்கும் போது விமலாவை தொடக் கூட விடவில்லையாம் ராஜா சாண்டோ. ஆனால் இந்த காட்சி போதும் என்று சொல்லிவிட்டாராம். என்.எஸ்.கேவிற்கு ஒரே கோபம். இப்பொழுது அடுத்த காட்சிக்காக தயாராகி கொண்டிருக்க அந்த சல்லாப காட்சி முடிந்ததும் அவர்களை சுற்றி நான்கு பேர் சுற்றி வளைக்க என்.எஸ்.கே. விமலாவை பிடித்துக் கொண்டு சண்டை இடும் காட்சியாம்.

raja2_cine

nsk mathuram

ஆனால் என்.எஸ்.கே அந்த பெண்ணை தொடமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். காரணத்தை கேட்க நான் ஏகபத்தினிவிரதன். என் பொண்டாடியை தவிர யாரையும் தொடமாட்டேன் என்று சொல்ல ராஜா சாண்டோவுக்கு கோபம் தலைக்கேறியதாம். மேலும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று ராஜா சொல்ல அப்பொழுது அதற்கு முந்தைய காட்சியில் மட்டும் ஏன் அப்படி செய்தீர்கள் என்று சுற்றி இருந்தவர்கள் கேட்டனராம்.

இதையும் படிங்க : நடிப்பை பார்த்து குபீர்ன்னு கேட்ட சிரிப்பலை… சினிமாவை பார்த்து பயந்து ஓடிய சூர்யா…

அதன் பிறகு தான் ராஜா சாண்டோவுக்கு உண்மை புரிந்திருக்கிறது. நடிகை விமலா மீதுள்ள அன்பால்தான் நாம் அப்படி செய்துவிட்டோம் என தவறை உணர்ந்தாராம். . இந்த தகவலை பிரபல நடிகர், தயாரிப்பளர் மற்றும் யுடியூப் வழியாக பல தகவல்களை கூறிவரும் சித்ரா லட்சுசுமணன் தெரிவித்துள்ளார்.

ராஜ சாண்டோ சந்திரகாந்தா, வசந்தசேனா, திருநீலகண்டர் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். சமூக கருத்துக்களை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். மேலும் முத்தக்காட்சிகளையும் ஆடைக்குறைப்பையும் தைரியமாக சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top