Categories: Cinema News latest news

சூரியை போல அந்த காமெடி நடிகரையும் தூக்கி விடப்போறாரா வெற்றிமாறன்?.. இந்த ஒரு வார்த்தையே போதுமே!..

இயக்குனர் வெற்றிமாறன் எந்த அளவுக்கு உண்மை கதைகளை மையமாக வைத்து டிராஜடி படங்களை எடுத்து வருகிறாரோ அதிலிருந்து முற்றிலும் அவரது குணம் மாறுபட்டது என்பது அவளுடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். சரியான காமெடி சென்ஸ் உள்ளவர் வெற்றிமாறன்.

நகைச்சுவை நடிகர் சூரியை பலரும் காமெடி நடிகராகவே பார்த்து வந்த நிலையில், அவரையும் ஹீரோவாக மாற்ற முடியும் என விடுதலை படத்தின் மூலம் சாதித்து காட்டியவர் வெற்றிமாறன். நடிகர் சூரிக்கே தனக்குள்ளே இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை வெற்றிமாறன் வெளிக்கொண்டு வந்த நிலையில், தொடர்ந்து கதை நாயகனாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த ஓவர் கோட்டும் எதுக்கு?.. உள்ளாடை தெரிய உச்சகட்டத்தை காட்டிய சமந்தா.. பதறிய ஃபேன்ஸ்!..

சூரியை ஹீரோவாக்கியதை போலவே வெற்றிமாறன் அடுத்தும் ஒரு காமெடி நடிகரை ஹீரோவாக ஆக்கப் போகிறாரா என கோலிவுட்டே பரபரப்பாகும் அளவுக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட வெற்றிமாறன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கேபிஒய் பாலாவை பார்த்து நீங்களும் நல்லா பண்றீங்க, நல்ல நடிகராக வருவீங்க என பாராட்டி உள்ளார்.

கேபிஒய் பாலாவின் கண்ணெல்லாம் வெற்றிமாறன் பேச பேச அப்படியே கலங்கிய காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: லோகிண்ணா ஒரு பொண்ணு கூடவா?.. 3 நாள் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்.. ஓப்பன் பேட்டி!..

பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து ஏகப்பட்ட விமர்சனங்களுடன் செய்துக் கொண்டே வருகிறார் கேபிஒய் பாலா. கலக்கப் போவது யாரு டீமையே தனக்குப் பிடிக்கும் என்றும் கேபிஒய் பாலா விரும்பிய இடத்துக்கு செல்வார் என வெற்றிமாறன் பேசியதே பாலாவை சந்தோஷமாக்கியிருக்கும்.

Saranya M
Published by
Saranya M