விடுதலை 2 வெற்றி களிப்பில் வெற்றிமாறன்! படக்குழுவை அழைத்து இப்படி ஒரு பரிசா?

by Rohini |
vetrimaran
X

vetrimaran

விடுதலை2:

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படமாக விளங்கியது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது.

முக்கியமாக ஓப்பனிங் சீனில் ரயில் விபத்துக்கான காரணத்தைப் பற்றி படம் முழுக்க விளக்கியுள்ளனர். அதுவும் வெற்றிமாறன் அந்த எட்டு நிமிட காட்சியை ஒரே டேக்கில் எடுத்தது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தி இருப்பதாக பல பேர் கருத்து தெரிவித்தனர். சூரி இந்த படத்தில் குமரேசனாக ஒரு இன்னசென்ட் மற்றும் நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருப்பார்.

படத்தின் ஹீரோ:

அவருடைய நடிப்பின் மூலம் இந்த படத்தின் ஹீரோ அவர்தான் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். விஜய் சேதுபதியை பற்றி சொல்லவே வேண்டாம். அவருடைய தனித்துவமான நடிப்பு பட முழுக்க ஆச்சரியப்படுத்துகிறது. இவர்களை எல்லாம் விட சேத்தன் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி படம் முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் இன்னும் படத்தைப் பற்றி சில பேர் கடுமையாக விமர்சித்து தான் வருகின்றனர். இடதுசாரிகளுக்கு ஆதரவாக இந்த படம் இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் வசூலில் இந்த படம் சாதனை படைத்து தான் வருகிறது.


வசூலிலும் சாதனை:

இரண்டு நாள் வசூல் ஆக பதினைந்து கோடிக்கும் மேல் இந்த படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் குறிப்பாக மலேசியாவில் இந்த படம் சொல்ல வரும் கருத்துதான் என்ன என அங்குள்ள மக்களுக்கு புரியாமல் இருப்பது தான் சிறிது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில் வெற்றிமாறன் கெரியரில் தோல்வியே பார்க்காதவர். இந்த படத்தின் மூலமும் வெற்றியைத் தான் கண்டுள்ளார்.

இதுவரை அவர் எடுத்த படங்கள் எதுவுமே தோல்வியை சந்தித்ததில்லை. அந்த வகையில் இந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு குறிப்பாக இந்த படத்தின் வெற்றியை தன்னுடைய படக்குழுவுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார் வெற்றிமாறன். தன்னுடைய படக்குழுக்களை அழைத்து அவர்களுக்கு ஒரு தங்க நாணயம் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறாராம் வெற்றிமாறன்.

Next Story