எல்லாம் சிம்புவால வந்தது!.. டென்ஷனில் வெற்றிமாறன்.. இனிமே அரசன் படத்தில் அனிருத் இல்ல..

 
aniruth

கலைப்புலி தாணு தயாரிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட திரைப்படம் அரசன். இந்த படத்திற்கு அனிருத் இசை என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக வெற்றிமாறன் படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில் முதல் முறையாக சிம்பு மற்றும் அனிருத் என காம்பினேஷன் களைகட்டியது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கவே தாமதமானது. ஒரு வழியாக படப்பிடிப்பை தொடங்கி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டனர். அது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவுக்கு அனிருத் கொடுத்த பின்னணி இசை சிம்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது..ஒருபக்கம் கென் கருணாஸை வைத்து வெற்றிமாறன் ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இதன் காரணமாக அரசன் படம் தாமதமாகி வருகிறது. இதில் ஏற்கனவே சிம்பு அப்செட் என்கிறார்கள்.

arasan

தீபாவளிக்கு 8 நிமிட புரமோ வீடியோவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அனிருத்துக்கு திருமணம் என்பதால் அவரால் அதற்கு பின்னணி இசை அமைக்க முடியவில்லை. ‘அவர் மீது எந்த தவறும் இல்லை.. கடைசி நேரத்தில் கொடுத்தால் அவரால் எப்படி இசையமைக்க முடியும்?’ என்கிறார்கள் அவரின் சகாக்கள்..

எனவே, அனிருத்தின் பின்னணி இசை இல்லாமல் 1.40 நிமிடம் ஓடக்கூடிய ஒரு புரமோஷன் வீடியோ தீபாவளியன்று வெளியானது. ஆனால் அது சிம்பு ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. ஒருபக்கம் ராஜன் வகையறா படத்திற்கு சாய் அபயங்கரை இசையமைக்க வைத்ததை அனிருத்தும் ரசிக்கவில்லை என்கிறார்கள்.

arasan

குறிப்பாக, இசையமைப்பாளர்களுடன் அமர்ந்து பேசி தனக்கு தேவையான பாடல்களை வாங்குபவர் வெற்றிமாறன். ஆனால் அனிருத்திடம் அது நடக்காது. என்ன சூழ்நிலை என்று சொல்லிவிட்டால் ‘நாளைக்கு காலைல வாங்க பாட்டு கொடுக்கிறேன்’ என்று சொல்லுவார். அவர் கொடுப்பதுதான் பாட்டு.. இது வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லை.. எனவே அரசன் படத்திற்கு அனிருத் வேண்டாம் என்கிற முடிவுக்கு வெற்றி மாறன் வந்து விட்டாராம்.அனேகமாக இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அல்லது ஜிவி பிரகாஷ் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

அரசன் படத்தை தொடங்கியபோதே ஜிவி பிரகாஷ்தான் வெற்றிமாறனின் தேர்வாக இருந்தது. ஆனால், சிம்பு கொடுத்த அழுத்தத்தின் பேரில் விருப்பமில்லாமல்தான் அனிருத் இசையமைக்க அவர் ஒத்துக்கொண்டார். தற்போது இந்த கூட்டணி பிரியும் நிலைக்கு வந்துவிட்டது..

Tags

From Around the web