Categories: Cinema News latest news throwback stories

கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்து விட்டார் வெற்றிமாறன்.! குற்றம் சாட்டிய இயக்குனர்.!

எப்போதும் திரையுலகில், திரைக்கு முன்னர் , அது கேமிராவாக இருந்தாலும், சரி, பத்திரிகையாளர்களின் கேமிராவாக இருந்தாலும் சாரி அது நடிகர் முதல் இயக்குனர் , தயாரிப்பாளர் என பலரும் நடிக்க தான் செய்வர். அதுதான் மேடை நாகரீகமும் கூட. சிலர் மட்டுமே அனைத்து இடத்திலும் ஒரே மாதிரி நடந்துகொள்வர் அது சர்ச்சைகளாகவும் மாறக்கூடும்.

பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் பாவப்பட்ட மனிதர்கள் என்றால் அது உதவி இயக்குனர்கள் தான். ஒரு இயக்குனர் தான் படத்தின் ஆணி வேர். அனைவரையும் கட்டி மேய்க்க அவரால் முடியாது எனபதால் அசிஸ்டென்ட் வைத்துக்கொள்வர். இதில் யார் தவறு செய்தாலும் முதல் திட்டு உதவி இயக்குனர்களுக்கு தான்.

அப்படி வாச்சென்னை ஷூடிட்ங் ஸ்பாட்டில் நடந்தவற்றை  இயக்குனர் அமீர் வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஜாலியாக பல உண்மைகளை கூறிவிட்டார்.  அதாவது, இயக்குனர் அமீர் கேமரா ஆப் செய்ததும் ஓரமாக ஒதுங்கி வாக்கி டாக்கியில் தன்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசி விட்டு வருவாராம்.

 

இதையும் படியுங்களேன் – தனது சம்பளத்தை அப்படியே திருப்பதி உண்டியலில் செலுத்திய சூர்யா.! பின்னணியில் பல சுவாரஸ்யங்கள்..,

ஒருமுறை அப்படி என்னதான் வெற்றிமாறன் பேசுகிறார் என்று அமீர் ஒட்டு கேட்டுள்ளாராம். அப்போது தான் தெரிந்ததாம் சில வேலைகள் தாமதமானால் கெட்ட கெட்ட வார்த்தைகளால் தனது உதவி இயக்குனர்களை வாக்கி டாக்கியில் திட்டு விட்டு வருவாராம். வெற்றிமாறன் . இதனை அமீர் கவனித்து மேடையில் ஜாலியாக பேசிவிடுவார்.

Manikandan
Published by
Manikandan