×

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் கவலைக்கிடம்....
 

 

2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ ஆனவர் வெற்றிவேல். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தார். மேலும், ஆளுநரிடமும் கடிதம் கொடுத்தார். எனவே, அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

இந்நிலயில், சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News