vettaiyan
Vettaiyan : கோட் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்க அடுத்ததாக வேட்டையன் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. த.ச. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள்.
படத்தின் டப்பிங் வேலைகளை எல்லாம் சமீபத்தில்தான் ரஜினிகாந்த் நிறைவு செய்தார். படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். த.ச. ஞானவேல் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜெய்பீம் திரைப்படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: 2 நாள் வசூல் எவ்வளவு?!.. பாக்ஸ் ஆபிசில் கோட் ஆக மாறிய தளபதி!..
அதே போல் ரஜினியை வைத்து எந்தமாதிரியான கதைகளத்தில் படத்தை எடுத்திருக்கிறார் என அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரஜினி ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிக்கும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது.
அதனால் அதே கோணத்தில் வேட்டையன் திரைப்படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகியிருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: அல்போன்சா மாம்பழம் போல இருக்கும் நடிகை… அலேக்கா தூக்கிய தமிழின் உச்ச நடிகர்
ஏற்கனவே ரஜினி அனிருத் காம்போவில் வெளியான அனைத்து பாடல்களும் இதுவரை சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அதே போல் வேட்டையன் திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாகும் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றதாம்.
vettaiyan1
இந்தப் பாடலை சூப்பர் சுப்புதான் எழுதியிருக்கிறார். ஏற்கனவே ஜெயிலர் படத்திலும் சூப்பர் சுப்புதான் பாடலை எழுதியிருந்தார். ரஜினியின் தீவிர வெறியன் தான் இந்த சூப்பர் சுப்பு. அதனால் இந்த மனசிலாயோ பாடலும் வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ராமமூர்த்திக்கு இறுதி மரியாதை… ரோகிணியின் அடுத்த பிளான்… சமாதானமான கோமதி!..
வேட்டையன் திரைப்படத்தில் மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், அபிராமி, ரித்திகா சிங் பொன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…