Categories: Cinema News latest news

வேட்டையன் படத்துக்கு அனிருத் போட்ட பக்கா பிளான்…! செமயா ஒர்க் அவுட் ஆகியிருக்கே..!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க லைகா நிறுவனம் தயாரித்து வரும் படம் வேட்டையன். படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு ரஜினி, மஞ்சுவாரியர் ஆடும் டான்ஸ் பக்காவாக வந்துள்ளது. அனிருத்தின் இசை அமர்க்களப்படுத்தியுள்ளது. பாடலை எழுதியவர்கள் யார்? என்ன சொல்கிறார்கள்னு பார்க்கலாமா…

‘மனசிலாயோ’ன்னு ஒரு பாடல் இப்போது இணையதளங்கள் முழுவதும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு வருகிறது. மலையாள வாடை வீசும் இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதுவும் சூப்பர்ஸ்டார் படம் என்பதால் வேட்டையன் பர்ஸ்ட் சிங்கிள் என்பதாலும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

vettaiyan

அனிருத் இசைஅமைத்துள்ளார். யுகேந்திரன், மலேசியாவாசுதேவன், அனிருத், தீப்தி சுரேஷ் உள்பட பலர் பாடி அசத்தியுள்ளனர். இந்தப் பாடலைப் பற்றி பாடலை எழுதிய சூப்பர் சுப்பு, விஷ்ணு எடவன் என்ன சொல்கிறார்கள்னு பார்க்கலாமா…

ஜெய்லர் படத்துல மிஸ் ஆனது வேட்டையன்ல நடந்துருக்கு என்கிறார்கள். படத்தில் தான் எழுதி பாடிய பாடலுக்கு ரஜினி வாய் அசைத்தது பயங்கர சந்தோஷமாக இருக்கிறது. மலேசியா வாசுதேவன் பாடியுள்ளதால் எனக்கு டபுள் ட்ரீட் என்கிறார் விஷ்ணு எடவன்.

ஏஐல மலேசியா வாசுதேவன் வாய்ஸ் தான் வரும் என்று தீர்மானித்தது முன்னாலயே நடந்த விஷயம் தான். இது வரவேற்கத் தகுந்தது என்கிறார்கள். கோவைத் தமிழ்ல தான் பாட்டு எழுதுவேன். சென்னைத் தமிழ்ல தான் பாட்டு எழுதுவேன்னு சொன்னா பாட்டு வராது. டியூனே சொல்லிடும்.

Also read: வேட்டையனா, கூலியா எது சிறந்த படமாக இருக்கும்? கழுவுற மீனுல நழுவுற மீனா பதில் சொல்லிட்டாரே..!

இதுக்கு இப்படித் தான் எழுதணும்னு. அப்படித் தான் இந்தப் பாடலும் உருவாகி இருக்கு என்கிறார் சூப்பர் சுப்பு. அனிருத் இந்த போர்ஷனை இவரு எழுதுனா நல்லா இருக்கும். இந்த போர்ஷனை இவரு எழுதுனா நல்லாருக்கும்னு அவரே பிரிச்சிக் கொடுத்தாரு. அப்படித் தான் இந்தப் பாடலை நாங்க எழுதுனோம் என்கிறார்கள்.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v