Connect with us

Cinema News

மின்னல் வேகத்துல போறாரே!.. வேட்டையன் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது தெரிந்ததும் அந்த இடத்தில் இருந்து தனது கேரவனுக்கு மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டே ரசிகர்களுக்கு கையசைத்துக் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்த முறை ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடர்ந்து தங்கள் ரசிகர்களுக்கு படத்தின் கெட்டப்பை எல்லாம் மறைக்காமல் போஸ் கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!..

விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் எந்தவொரு சத்தமும் இன்றி நடைபெற்று வரும் நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் அலப்பறை கிளப்பி வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நடிகர்கள் வெளிப்படையாக வருவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அடியாத்தி!.. தொடையை தாண்டிக் காட்டுறாரே.. ஜெயம் ரவி ஹீரோயினா இப்படி.. சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே!..

பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விஜய் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தரிசனம் கொடுத்து வருவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top