Connect with us
Rana daggupathi

Cinema News

ரஜினி ரசிகர்களை கிளப்பிவிட்ட வேட்டையன் பட நடிகர்!.. கொஞ்சம் சும்மா இருங்க பாஸ்!…

பாகுபலியில் முரட்டுத்தனமான உடற்கட்டுடன் வில்லனாக வந்து ரசிகர்களை மிரட்டியவர் ராணா டகுபதி. இவர் தான் ரஜினியின் வேட்டையன் படத்திலும் வில்லன் என்றதும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

இவர் சமீபத்தில் படப்பிடிப்பின் போது தான் எடுத்த செல்பியை போட்டு பரபரப்பை உருவாக்கி உள்ளார். இதனால் ரசிகர்கள் படத்தைப் பற்றி வேறு ஏதாவது அப்டேட்டுகள் கிடைக்குமா என்று ராணாவின் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து விசாரித்து வருகிறார்களாம்.

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற அன்னபூர்ணா ஸ்டூடியோவின் ஒரு மாடியில் வேட்டையன் படப்பிடிப்பு நடந்ததாம். இதை அறிந்த ரசிகர்கள் ரஜினி, ராணா டகுபதியின் நடிப்பைப் பார்க்க ஆவலாய் அந்த இடத்திற்கு விரைந்தனராம். ஆனால் படத்தின் சூட்டிங் அங்கு நடந்தது உண்மை தான். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ரஜினி அங்கு வரவில்லை. ராணாவுடனான காட்சிகள் மட்டும் படமாக்கி வந்தார்களாம். அங்கு படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இருந்தாராம்.

படத்தில் ரஜினிக்கும் ராணாவுக்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. ராணாவைப் பொருத்தவரை இது முதல் முறை இல்லையாம். இதே போல இதற்கு முன்பு பிரபாஸ், பவன் கல்யாண் படத்தில் நடித்த போதும் இப்படித் தான் செல்பியை போட்டு ரசிகர்களிடம் ஒரு பரபரப்பை உண்டாக்கினாராம். படத்தில் தான் வில்லன் என்றால் நிஜத்தில் இவர் ஒரு பெரிய ஜாம்பவனாக இருப்பார் போல.

Raana

Raana

ராணா டகுபதி ருத்ரன், காடன், ராணா நாயுடு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் தம் மாரோ தம், ஹவுஸ்புல் 4 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். டோலிவுட்டைப் பொருத்தவரை இவர் ஒரு முன்னணி நடிகர். இவர் தற்போது 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

பொதுவாக ஒரு படம் வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லன் இருக்க வேண்டும். அந்த வகையில் ராணா பொருத்தமானவர் தான். அதனால் வேட்டையன் படத்தில் அவரை சரியாகப் பயன்படுத்தும்பட்சத்தில் படம் அமோக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top