Nayanthara: வைப் மோடில் விக்கி- நயன் ஜோடி
வைப் மோடில் விக்கி- நயன் ஜோடி
Updated: May 20, 2026, 21:31 IST
தமிழ் திரையுலகில் காதல் திருமணம் செய்த ஜோடிகளில் விக்னேஷ் சிவன் நயந்தரா ஜோடியும் ஒருவர். நானும் ரௌடிதான் படப்பிடிப்பில் துவங்கிய இவர்களது காதல் சில ஆண்டுகளுக்கு பின் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

2005ல் ஐயா படம் மூலம் அறிமுகம் ஆன நயந்தாரா தற்போதுவரை முன்னணி நாயகியாக வலம் வருகிறார். சினிமாவில் நடிப்பதுமட்டுமின்றி இப்போது ரௌடி பிச்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் கோடை விடுமுறையொட்டி நயன் விக்கி ஜோடி வாடிகர் சிட்டியிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

