பிரேக் டவுன்னு சொன்னாங்க.. பவர் ஸ்டார் படமா? ‘விடாமுயற்சி’யை முதல் நாளே வச்சு செய்யும் நெட்டிசன்கள்

by Rohini |   ( Updated:2025-02-06 15:37:32  )
power star
X

விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் இன்று உலகெங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

இரண்டு வருட காத்திருப்பு: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து அஜித் நடித்து வெளியாகும் திரைப்படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ஒரு ஆக்சன் படமாக அமைந்தது. அந்தப் படமும் பெரிய அளவில் ஹிட்டானது. அதனை அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

வித்தியாசமான ஜானர்: ஆனால் படம் ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்கும் படமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்பவும் போல் இருக்கும் அஜித் படம் மாதிரி இல்லாமல் வித்தியாசமான படமாக இருப்பதாக கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே மகிழ் திருமேனி பேட்டிகளில் கூறும் பொழுது மற்ற படத்தை மாதிரி இந்த படத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என்று கூறியிருந்தார். அவர் சொன்னதைப் போல இது வேறு விதமான ஜானர் திரைப்படம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காணாமல் போகும் மனைவி:படத்தின் கதைப்படி தனது காதல் மனைவியான திரிஷா ஒரு கட்டத்திற்கு பிறகு காணாமல் போக அவரை யாரோ கடத்தி வைப்பதாக கதை நகருகிறது. அவரைத் தேடும் முயற்சியில் அஜித் இருக்க கடைசியில் சில பல ட்விஸ்ட் படத்தில் அமைந்து த்ரிஷாவை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை போலத்தான் படம் நகருகிறது என ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல பேர் படத்தை பற்றி கூறி வந்தனர் .

அது மட்டுமல்ல பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்றும் கூறியிருந்தார்கள் .இந்த நிலையில் ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கண்டிப்பாக அந்த படத்தை நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் வச்சு செய்வார்கள். அதைப்போல விடாமுயற்சி திரைப்படத்தையும் முதல் நாளே வச்சு செய்து வருகின்றனர்.

விடாமுயற்சி படத்தை பொறுத்த வரைக்கும் மனைவியை தேடும் மாதிரியான கதை என்பதால் நடிகர் பவர்ஸ்டார் ஒரு படத்தில் அவருடைய மனைவியை தொலைத்து விட்டு வில்லனிடம் என் பொண்டாட்டிய கொடுத்திடுங்க என் பொண்டாட்டிய கொடுத்திடுங்க என கெஞ்சுவார். அந்த வீடியோவை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து விடாமுயற்சி படத்தின் கிளைமாக்ஸ் வீடியோ லீக் ஆனது என படத்தை பங்கம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அந்த வீடியோ லிங்க்:https://x.com/ManGotha_Da/status/1887182673598423175


Next Story