கழுத்தை நெரிச்சுட்டேன்.. வலியில் துடித்த அஜித்! வெளிவராத விடாமுயற்சி பகீர்

by Rohini |
ajith
X

கண்டட் ஓரியண்டட்: விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி ஓரளவு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து போனது வேறு .படத்தில் இருந்தது வேறு .அப்படியாக அஜித் என்றாலே மாஸ் என்று நினைத்து தான் படத்தை எதிர்பார்த்து போனார்கள் .ஆனால் முழுக்க முழுக்க கன்டென்ட் ஓரியண்டட் படமாக தான் விடாமுயற்சி திரைப்படம் அமைந்தது .இது ஒரு சில பேருக்கு ஏமாற்றத்தை தந்தது. சில பேர் இதை ஏற்றுக் கொண்டார்கள். நல்ல ஒரு கன்டண்டை இந்த படம் சொல்லி இருக்கிறது என பல பேர் பாராட்டி வருகிறார்கள்.

திரிஷாவுடன் நடித்த கணேஷ்: இந்த நிலையில் படத்தின் வில்லனாக நடித்தவரில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் கணேஷ் சரவணன், ராவண கோட்டம் படத்தில் நடித்தவர். இவர் ஏற்கனவே அர்ஜுனுடன் இரும்புத்திரை படத்திலும் திரிஷாவுடன் பூலோகம் திரைப்படத்திலும் ஆரவுடன் கழகத் தலைவன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். அஜித்துடன் முதன்முறையாக விடாமுயற்சி படத்தில் தான் இணைந்திருக்கிறார் .வில்லன் குரூப்பில் ஒரு முக்கியமான தலையாக இந்த படத்தில் நடித்திருப்பார் கணேஷ் சரவணன். இவர் அஜித்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

பாராட்டை பெற்ற ஃபைட் சீன்: அதாவது படத்தில் பைட் சீன் வரும் போது அஜித் சார் தான் எங்களுக்கு அப்படி அடிங்க இப்படி அடிங்க என்று சொல்லிக் கொடுப்பார் .உங்களை அடித்தால் ரசிகர்கள் எங்களை சும்மா விடமாட்டார்கள் என்று சொன்னாலும் என்னுடைய ரசிகர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். படத்தை படமாக தான் பார்ப்பார்கள் என்று அஜித் சொன்னதாக கணேஷ் சரவணன் கூறினார். விடாமுயற்சி படத்தில் ஒரு கார் பைட் சீன். அதில் பின் இருக்கையில் கணேஷ் சரவணன் உட்பட இரண்டு பேர் அமர்ந்திருப்பார்கள். முன் இருக்கையில் அஜித் ஆரவ் அமர்ந்திருப்பார்கள்.

வலியில் கத்திய அஜித்: அதில் கணேஷ் சரவணன் அஜித்தை தாக்குவதைப் போல ஒரு சீன் இருக்கும். அப்போது கார் வேகமாக ஓடும் போது திடீரென ஆரவ் பிரேக் போட பின் இருக்கையில் இருந்த கணேஷ் சரவணன் முன்னாடி வந்து ஹம்மரின் கண்ணாடியில் வந்து மோதி விட்டாராம். அதில் அந்த கண்ணாடி உண்மையில் உடைந்து விட்டதாம். அந்த வலியில் கணேஷ் சரவணன் அஜித்தின் கழுத்தை மிகவும் வேகமாக நெரித்து இருக்கிறார். அதில் அஜித் கத்தி விட்டாராம்.

உடனே அவருடைய கழுத்தை பிடித்தவாறு கதவை திறந்து வெளியே வந்த அஜித் முதலில் அவனைப் பாருங்க கண்ணாடியில் மோதி விட்டான். அவன் தலைக்கு எதுவும் ஆகிவிட்டதா என பாருங்கள் என சொன்னாராம். ஆனால் அவருடைய கழுத்தை நான் வேகமாக நெரித்து விட்டேன். இருந்தாலும் அவர் என்னுடைய உடம்பின் மீது தான் அக்கறை கொண்டார் என கணேஷ் சரவணன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.


அது மட்டுமல்ல படம் எடுக்கும் போது ஒரு சமயம் அஜித்துக்கு கால் உடைந்து சில நாட்கள் ஸ்டிக் உடன் தான் நடந்தாராம். இன்னொரு சீனில் கடும் காய்ச்சலிலும் அவதிப்பட்டாராம் .அப்போது அஜர்பைஜானில் குளிர் அதிகமாக இருந்திருக்கிறது .அந்த காய்ச்சலில் ஸ்வெட்டர் அணிந்திருந்த அஜித் கணேஷ் சரவணன் குளிரில் நடுங்குவதை பார்த்து தான் அணிந்திருந்த ஸ்வட்டரை கணேஷ் சரவணனுக்கு கொடுத்தாராம். இப்படி வேற எந்த நடிகராவது பண்ணுவார்களா என்றால் தெரியாது. ஆனால் அஜித் சார் தன்னைவிட தன்னை சுற்றி இருப்பவர்களின் நலன் மீதுதான் அதிக அக்கறை கொண்டவராக இருந்தார் என கூறினார்.

Next Story