கொஞ்சம் அசந்தா போதுமே! 150 கோடி நஷ்ட ஈடு பொய்.. கெத்தா களமிறங்கும் ‘விடாமுயற்சி’
சமீபகாலமாக இண்டஸ்ட்ரியில் பேசப்படும் செய்தியாக இருப்பது விடாமுயற்சி திரைப்படம். 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் என்றும் அந்தப் படத்தை அப்படியே காப்பி எடுத்து இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பட நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு ரைட்சையும் விடாமுயற்சி படக் குழு வாங்கவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
அதனால் பிரேக் டவுன் திரைப்பட நிறுவனம் லைக்கா நிறுவனத்திடம் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டு வந்தது. இதைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறிய தகவல்தான் இது. இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதுமே லைக்கா நிறுவனத்திடமும் சம்பந்தப்பட்ட நண்பர்களிடமும் தனஞ்ஜெயன் போனில் அழைத்து விவரத்தை கேட்டாராம்.
ஏனெனில் 150 கோடி என்பது இன்றைய சூழலில் அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இவ்வளவு சர்வ சாதாரணமாக இந்த ஒரு தகவல் பரவி வருகிறது என நினைத்து லைக்கா நிறுவனத்திடம் கேட்டபோது மூன்று மாதத்திற்கு முன்பாகவே அதற்கான உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கி விட்டார்களாம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் சினிமா துறையில் ஒரு நம்பகத்தன்மை மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருப்பது லைக்கா நிறுவனம்.
அதுவும் ஒரு பெரிய நிறுவனம். அப்படி இருக்கும் பொழுது எப்படி அவர்களால் ஒரு ஹாலிவுட் படத்தை எந்த ஒரு உரிமையும் கோராமல் ரீமேக் செய்ய முடியும்? அது அவர்களுக்கு தெரியாதா? அதனால் பிரேக் டவுன் பட நிறுவனத்திடம் கேட்டு தான் விடாமுயற்சி படத்தின் கதையை ரீமேக் செய்திருக்கிறார்களாம். அதற்கான எல்லா ப்ராசஸும் முடிந்து விட்டதாம்.
ஆனால் எப்படி இந்த மாதிரி செய்தி பரவி வருகிறது என்று தெரியவில்லை என தனஞ்செயன் கூறினார். மேலும் ஜனவரி 10ஆம் தேதி விடாமுயற்சி கண்டிப்பாக ரிலீசாக போகிறது. அஜர்பைஜானில் சில பேட்ச் ஒர்க் இருக்கிறதாம். அதன் பிறகு ஹைதராபாத்திலும் மூன்று நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறதாம்.
இதில் ஒரு பாடல் காட்சியும் படமாக்க வேண்டி இருக்கிறதாம். டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. அதனால் சீக்கிரமாகவே மொத்த வேலையையும் முடித்துவிட்டு ஜனவரி 10ம் தேதி கண்டிப்பாக விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என தனஞ்செயன் கூறினார்.