இந்த வருடம் ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ‘விடாமுயற்சி’.. வருஷ கடைசியிலுமா?
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டு வருகின்றன. இன்னொரு பக்கம் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வருமா வராதா என அந்த படத்தை பற்றிய செய்திகள் நாள்தோறும் வரும்பொழுது ரசிகர்களுக்கு ஒரு பீதியை கிளப்புவதாகவே இருக்கிறது.ஆனால் படத்தின் டீசர் வெளியான போது அந்த டீசரிலேயே பொங்கல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தார்கள்.
ஆனால் நடக்கிற பிரச்சினையை எல்லாம் பார்க்கும் பொழுது கண்டிப்பாக வராது என்பதைப் போல தான் இருக்கிறது. நேற்று வந்த தகவலின் படி விடாமுயற்சி ஒருவேளை பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றால் அதே தேதியில் விக்ரம் நடிக்கும் வீரதீர சூரன் திரைப்படம் வெளியாகும். விடாமுயற்சி ரிலீஸ் தேதிக்காகத்தான் விக்ரமின் படம் காத்திருப்பதாக தகவல் வெளியானது .
ஆனால் விடாமுயற்சி படக்குழு இன்னும் தங்களுடைய ரிலீஸ் தேதியில் குழப்பமாகத்தான் இருக்கிறார்கள். தானும் வாழாமல் பிறரையும் வாழ விடாமல் விடாமுயற்சி திரைப்படம் கெடுப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது மட்டுமல்ல இந்நேரம் விடாமுயற்சி படத்தின் சென்சார் முடிவடைந்து இருக்க வேண்டும். அதுவும் இன்னும் முடியவில்லை. இப்படி இருக்கும் பொழுது எப்படி விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றது.
ஓவர்சீஸை பொறுத்தவரைக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்சாருக்கு அனுப்பி இருக்க வேண்டுமாம். ஆனால் இதுவரை சென்சாருக்கு அனுப்பப்படவில்லை. மேலும் அனிருத்தும் படத்தின் பின்னணி இசைக்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மகிழ்த்திருமேனியும் அவருடைய டெக்னீசியன்களை தூங்கவிடாமல் படத்தின் வேலையை இரவு பகலாக பார்க்கச் சொல்வதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இப்படி விடாமுயற்சி படத்தின் மொத்த டீமும் அயராது உழைத்துக் கொண்டிருக்க ஜனவரி 5ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த பணியையும் முடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் படக்குழு இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அதுமட்டுமல்ல விடாமுயற்சி படத்தால் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை லண்டனில் கோலாகலமாகக் கொண்டாடும் லைக்கா நிறுவனமும் இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியவில்லை. இப்படி விடாமுயற்சி படத்தால் ஒட்டுமொத்த டீமும் ஒரே குழப்பத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.