அஜித்த ரொம்ப நாளைக்கு பிறகு அப்படி ஒரு சீனில்.. ஆக்‌ஷன் படத்தில் இப்படி ஒரு காட்சியா?

by Rohini |
vidaamuyarchi
X

எதிர்பார்ப்பில் விடாமுயற்சி: நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த திரைப்படமான விடாமுயற்சி படம் உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. இதுவரை இல்லாத சாதனையாக விடாமுயற்சி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஒரே ஏறுமுகமாக தான் இருக்கிறது. முன்பதிவிலேயே 25 கோடியை விடாமுயற்சி திரைப்படம் அள்ளிவிடும் என்று சொல்லி வருகிறார்கள். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், ரெஜினா , ஆரவ் என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.


அஜித்தின் கடின உழைப்பு: இந்த படம் ஆரம்பிக்கும் போதே ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்றுதான் கூறி வந்தார்கள். ஆனால் சமீப காலமாக ஆரவ் பேட்டிகளில் கூறும் போது பிரேக் டவுன் படத்தின் ரீமேக் கிடையாது என தெரிவித்து வருகிறார். அதனால் படத்தின் உண்மை தன்மை என்ன என்பது நாளை ரிலீஸ் ஆகும் போது தான் தெரியவரும். இன்னொரு பக்கம் மகிழ் திருமேனி பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் .அதில் மிகவும் நம்பிக்கையுடன் விடாமுயற்சி படத்தைப் பற்றி பெருமையாக பேசி வருகிறார் மகிழ்திருமேனி. அதில் குறிப்பாக அஜித்தின் உழைப்பு எப்படியானது என்பதை பற்றியும் தெரிவித்து இருக்கிறார்.

காதல் கதை: இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் மகிழ் கூறும்பொழுது படத்தில் ரொமான்டிக் காட்சிகள் இருக்கின்றன. அதுவும் நல்ல ஒரு ரொமான்டிக் சீன் இந்த படத்தில் இருக்கின்றது என்பது போல தெரிவித்து இருந்தார். ஏற்கனவே படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது பெரும்பாலும் அஜித் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளாகவே இருக்கின்றது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அந்த பந்தம் அவர்களுக்கிடையேயான அன்பு அதனால் வெடிக்கும் பிரச்சினை இதைப்பற்றி தான் இந்த படம் பேசப்போகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.


ஆக்‌ஷன் படம் இல்லையா?: இன்னொரு பக்கம் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சி, அஜித்தை துரத்தும் கும்பல் என ஹாலிவுட் தரத்தில் ஒரு பக்கா ஆக்சன் படமாகவும் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அஜித் திரிஷா இவர்களை மையப்படுத்தி தான் இந்த கதை அடுத்தடுத்து நகரும் என்று மட்டும் நம்மால் ஓரளவு சொல்ல முடிகிறது .ஏற்கனவே கிரீடம் படத்தில் இருவருக்குமான அந்த ரொமான்ஸ் காட்சி அனைவருக்கும் ரசிக்கும் படியாக இருந்தது. அது முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட கதையாக தான் இருந்தது.

அதற்கடுத்தபடியாக இந்த படத்திலும் அப்படி ஏதும் காட்சி இருக்குமா என்பதை படம் பார்க்கும் பொழுது தான் நமக்கு தெரிய வரும். ஆனால் நல்ல ஒரு ரொமான்டிக் சீன் இருக்கிறது என மகிழ் கிருமேனி சொல்லும்போது லியோ படத்தில் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இருந்த காட்சி மாதிரி ஏதேனும் வைத்திருக்கிறாரா என்று ரசிகர்கள் பயந்து இருக்கின்றனர். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அஜித் முத்தக் காட்சிகளிலோ அல்லது ரொமான்டிக் காட்சியிலோ நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அது அவருடைய ரசிகர்களுக்கும் பெருமையாக இருந்தது. அஜித்தை இப்படித்தான் பார்க்க வேண்டும் என ஒரு கட்டத்திற்கு பிறகு அவருடைய ரசிகர்களை நினைத்து விட்டார்கள். அதற்கு ஏற்ப அஜித்தும் அதையெல்லாம் படங்களில் நிறுத்திக் கொண்டார். ஆனால் மகிழ்திருமேனி சொல்வதை பார்க்கும் பொழுது ஏதேனும் காட்சிகளை வைத்திருக்கிறாரா என கதி கலங்கி போய் இருக்கின்றனர்.

Next Story