டீசரிலேயே வெறியேத்துனாங்க.. அடுத்து டிரைலரா? வெளியான விடாமுயற்சி படத்தின் டிரைலர் அப்டேட்
அஜித்:
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது பாங்காங்கில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்த நிலையில் இன்னும் சில டாக்கி போர்ஷன் மற்றும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதால் தற்போது விடாமுயற்சி படக்குழு பாங்காங் சென்றுள்ளது. இதற்காக அஜித் 4 நாட்கள் மட்டும் கால்சீட் கொடுத்திருக்கிறாராம்.அ
அதற்குள் இந்த காட்சிகளை எல்லாம் எடுத்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷனுக்காக படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் ரிலீஸ் ஆக படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
பிரேக் டவுன்:
இது 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான பிரேக் டவுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் படத்தின் டீசரிலேயே அதற்கான ரிசம்பல்ஸ் நன்றாகவே தெரிகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அந்த ஹாலிவுட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரைட்சை வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையில் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் என்ற நிலையில் இன்னும் படத்தின் டிரைலரைப் பற்றிய அப்டேட் எதுவுமே இல்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான பதில் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றது.
ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு:
பாங்காங் சென்றுள்ள படக்குழு அங்குள்ள வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு திரும்பியதும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் புது வருட பிறப்பு அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
அதன் நிறைவு நாளில் அஜித்துடன் படக்குழு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதுவும் அஜித் அந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக இருந்தது அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அடுத்தடுத்து அஜித்தின் திரைப்படங்களின் அப்டேட் வெளியாக வெளியாக ரசிகர்கள் குதூகலத்தில் இருந்து வருகின்றனர்.