அஜித் அறிக்கையால் அனிருத்துக்கும் செக்.. என்ன செய்யப் போறாருனு தெரியலயே

by Rohini |
aniruth
X

aniruth

வேகமெடுக்கும் அஜித் அறிக்கை: நேற்றிலிருந்து அஜித் சோசியல் மீடியாக்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறார். அதற்கு காரணம் அவர் வெளியிட்ட அறிக்கை. நேற்று தான் துபாயில் இருந்து சென்னை திரும்பினார் அஜித். வந்ததும் முதல் வேளையாக ஒரு பக்க அறிக்கையை தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் எக்ஸ் வலை தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் அஜித். அந்த அறிக்கையில் சமீப காலமாக தன்னை கடவுளே அஜித்தே என கோஷமிட்டு வருவதை பார்த்து வருகிறேன்.

அது என்னை மிகவும் கவலை அடைய செய்திருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் என் பெயரோடு வேற எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்க வேண்டாம். எனக்கான பெயரை வைத்து அழைத்தால் போதும். விழாக்களிலும் பொது நிகழ்வுகளிலும் இந்த மாதிரி கோஷமிட்டு மற்றவர்களை துன்புறுத்தும் இந்த செயலை இனிமேல் செய்ய வேண்டாம். உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புது டிரெண்ட்: உங்கள் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பது மாதிரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித். அந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே மீண்டும் அஜித்தின் பெயரை வைத்து ரசிகர்கள் வேறு ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினர். அவர் பெயர் முன் வேறு எந்த பெயரையும் சேர்க்கக்கூடாது என்று தானே சொன்னார் என ஆங்காங்கே இருக்கும் சில ரசிகர்கள் கடவுளே என்ற வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு அஜித்தே அஜித்தே என டிரம் இசையுடன் சேர்த்து பாட ஆரம்பித்து விட்டனர்.

இப்போது அதுதான் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே ‘அஜித்தே கடவுளே’ இது தன்னை கவர்ந்தது என அனிருத் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே தான் விடாமுயற்சி படத்தின் டீசரிலும் கடைசி நிமிடத்தில் அஜீத்தே கடவுளே என வைத்திருப்பார் அனிருத். அதனால் ரசிகர்களை கண்ட்ரோல் செய்த அஜித் விடாமுயற்சி டீசரிலும் அதை எடுக்கும்படி வற்புறுத்த வேண்டும்.




அனிருத்துக்கு ஆப்பு: ஒரு வேளை அந்த டீசரில் அந்த கோஷம் இருந்தது என்றால் அது இன்னும் ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும் என கோடம்பாக்கத்தில் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி அனிருத்திடம் கேட்டதற்கு டீசரில் அஜித்தே கடவுளே என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். கடவுளே அஜித்தே என்று இல்லை என கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைக் கேட்கும் சில பேர் பூவை பூ என்றும் சொல்லலாம். புஷ்பம் என்றும் சொல்லலாம் என கவுண்டமணி செந்தில் காமெடியை நினைவுபடுத்தி கிண்டல் அடித்து வருகின்றனர்.

Next Story