vidamuyarchi
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளிவரும் படம் விடாமுயற்சி. இழு இழுன்னு இழுத்துக் கொண்டு இருந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒருவழியா அறிவிச்சிட்டாங்கப்பா. 2025 பொங்கலுக்குத் தான் வருது. இந்தப் படத்தை ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமுடன் எதிர்பார்த்து வர்றாங்க.
Also read: நயன்தாரா, தனுஷ் பிரச்சனைக்கு முக்கிய காரணமே அவர் தானா? யாரைச் சொல்றாரு பிரபலம்?
படத்தோட டீசர் தற்போது தான் வெளியானது. அஜீத் பார்க்கும்போது ஸ்டைலா இருக்காரு. ஆரம்பத்தில் ஒருவரை அர்ஜூன் சுட்டுத் தள்ளி விட்டு சிரிக்கிறார். அனிருத்தின் இசை ரசிக்க வைக்கிறது.
அஜீத் ஜீப்பில் சேஸிங் காட்சியில் மிரட்டுகிறார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக இருக்கும் என்று தெரிகிறது. படத்தில் திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். அஜீத்தின் லுக் ஒவ்வொன்றும் தெறிக்க விடுகிறது.
படத்தில் பெரும்பாலான காட்சி அஜர் பைஜானில் எடுக்கப்பட்டது. அங்குள்ள கால சூழல் மற்றும் பருவகால மாறுபாடுகளால் படத்தின் படப்பிடிப்பில் காலதாமதம் ஆனது. ஆனாலும் அதற்கான பலன் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
படத்தில் அஜீத் 2 வீலில் ஜீப்பை ஓட்டும் காட்சி கூஸ்பம்ப்ஸ் ஆகவே உள்ளது. டீசரிலேயே இப்படி இருந்தால் அடுத்தடுத்து அப்டேட்டுகள் எப்போ வரும் என்று எதிர்பார்ப்பு எகிறி விட்டது என்றே சொல்லலாம். வழக்கமான ஒயிட் ஹேராக இருந்தாலும் அஜீத்தின் லுக் ஹேண்ட்சம்மாகத் தான் உள்ளது.
vidamuyarchi teaser
எல்லாரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு என்ற ஒற்றை வரி தான் படத்தின் உயிர் நாதம் என்று தெரிகிறது. அதுதான் விடாமுயற்சி திருவினையாக்கும் என்பதுடன் டீசர் முடிகிறது. எப்படியோ குட்பேட் அக்லி படமும் முதலில் வெளிவருவதாக இருந்தது.
இப்போது விடாமுயற்சியும் பொங்கலுக்கு வெளிவருகிறது. தாமதமான படைப்பானாலும் தரமான படைப்பாக வரும் என்று ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்துள்ளனர். அப்படின்னா இது இரட்டைப் பொங்கலா தல ரசிகர்களுக்கு?
see the teaser:https://www.youtube.com/watch?v=Wtq3RRORVx4
Karur: நடிகரும்…
Karur: தற்போது…
Karur: தவெக…
TVK Vijay:…
நடிகரும் தவெக…