×

நண்பனின் மனைவிக் குளிப்பதை வீடியோ எடுத்த காமுகன் – உண்மை அறிந்த கணவன் எடுத்த முடிவு !

கோவில்பட்டி அருகே அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் கொலைக்கு பின்னுள்ள காரணத்தைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

 

கோவில்பட்டி அருகே அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் கொலைக்கு பின்னுள்ள காரணத்தைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கோவில்பட்டியில் உள்ள செட்டிக்குறிச்சி சாலைக்கு அருகேயுள்ள தோட்டத்தில் இரு தினங்களுக்கு முன்னதாக அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சடலத்தைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் கம்மாப்பட்டியை சேர்ந்த சித்தாள், மில்டன்ராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரைக் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் காணவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடைசியாக அவர் தன் செல்போனில் இருந்து விஜயன் என்ற கொத்தனார் நண்பருக்கு பேசிடிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் மில்டனைக் கொலை செய்ததை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். மேலும், தன்னுடைய மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னைப் பணம் கேட்டு மிரட்டியதால் நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News