×

டாய்லெட்டில் புகுந்த பாம்பு - வைரலாகும் வீடியோ

மனிதர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் பாம்புகள் புகுந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. மேலை நாடுகளில் இந்த சம்பவம் மிகவும் அதிகமாகவே நடக்கும். இது தொடர்பான வீடியோக்களும் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
 

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் வசிப்பவர் கண் வெஸ்ட். இவர் வழக்கம் போல் தனது வீட்டு கழிப்பறைக்கு சென்றவர், அங்கு வித்தியாசமாக ஒன்று ஊர்வதை கண்டார். அதன்பின் அது பாம்பு என்பது அவருக்கு தெரியவந்தது.

அதன்பின் பேட்டன் மலான் என்பவரை அழைத்து அதை காண்பித்தார். அதன்பின் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. அப்போது எடுத்த வீடியோவை அவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோவை இதுவரை 2.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News