Connect with us

Cinema News

பெரும் நடிகர்களுக்கே இந்த நிலையா?.. கை கொடுத்து உதவிய விஜய் படம்!..

சினிமாவில் முயற்சி தேடி வரும் நடிகர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டமான நிலைமை தான் இருக்கும். இளையராஜாவின் துவங்கி இப்போது சினிமாவிற்கு வந்த பிரபலங்கள் வரை பலரும் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடிதான் தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டுள்ளனர்.

இப்போது பெரும் நடிகர்களாக இருக்கும் பலரும் இதற்கு முன்பு சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளனர். அப்போதைய காலகட்டத்தில் அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பது மூலம் வரும் பணமே தேவையாக இருந்தது. ஏனெனில் தொடர்ந்து சினிமாவில் முயற்சிப்பவர்களுக்கு வேறு எந்த வகையிலும் பணம் கிடைக்காது.

vidharth

vidharth

நடிகர் விதார்த் மற்றும் விமலுக்கும் இந்த மாதிரியான நிலை ஏற்பட்டது ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்த பொழுது விதார்த் ஒரு சின்ன அறையில் தங்கிக் கொண்டு நடிக்க முயற்சி செய்து வந்தார் மேலும் சினிமா பயிற்சி பட்டறைக்கும் சென்று வந்து கொண்டிருந்தார்.

உதவிய இயக்குனர்:

இந்த சமயத்தில் அவரிடம் சுத்தமாக பணமே இல்லாத நிலை ஏற்பட்டது அப்போது விமலும் விதார்த்தும் பலரிடமும் சின்ன கதாபாத்திரங்களுக்கு வாய்ப்பு கேட்டு வந்தனர். அப்பொழுது இயக்குனர் தரணியிடம் ஏதாவது வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என்று அவர்கள் கேட்டிருந்தனர்.

vijay

vijay

அந்த சமயத்தில்தான் இயக்குனர் தரணி குருவி திரைப்படத்தை இயக்கி வந்தார். அந்த திரைப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டது. எனவே தினசரி ஆயிரம் ரூபாய் சம்பளம் என்கிற ரீதியில் பேசி அறுபது நாட்கள் விதார்த்திற்கும் விமலுக்கும் கால்ஷீட் வாங்கி கொடுத்தார் இயக்குனர் தரணி.

இதன் மூலம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதித்த இருவரும் பிறகு அதை வைத்துதான் ஒரு வருடத்திற்கு காலத்தை தள்ளியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் விதார்த்.

இதையும் படிங்க: என் ஆசையில் மண்ணள்ளிப் போட்டான்! மகனை பற்றி முதன் முறையாக வாய்திறந்த விஜய்

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top