Categories: Cinema News latest news

Viduthalai 2: புலி பதுங்குறது பாய்றதுக்குத்தான்… விடுதலை 2 டிரெய்லர், பாட்டு எப்படி இருக்கு?

இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரியின் நடிப்பில் இளையராஜாவின் இசையில் விரைவில் வெளிவர உள்ள படம் விடுதலை 2. படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. எப்படி இருக்குன்னு பார்ப்போமா?

Also read: தனுஷ்-நயன் பிரச்சனை!.. யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான பதிலை கொடுத்த பார்த்திபன்?!..

‘தத்துவம் இல்லாம தலைவர் இல்லை. ரசிகர மட்டும் தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது. வன்முறை மொழி கிடையாது. அது மொழிதான்னா அந்த மொழியும் எங்களுக்குத் தெரியும்’ என பல வீர வசனங்கள் டிரெய்லரில் வருகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது விடுதலை 2ம் பாகம் முதல் பாகத்தை விட இருமடங்கு தெறிக்கவிடும் என்றே தெரிகிறது.

படத்தில் இளையராஜாவின் இசை முதல் பாகம் போலவே அற்புதமாக உள்ளது. காதல் மெலடி பாடல்கள் செமயாக உள்ளன. அதிலும் தெனம் தெனமும் உன் நினைப்பு பாடல் இளையராஜாவின் வெண்கலக்குரலில் சும்மா அள்ளுது. இப்படியும் இசை அமைக்க முடியுமா என்று நம்மையே ஆச்சரியப்பட வைக்கிறார். அவரே ஒரு பாடலும் எழுதி உள்ளார். படத்தில் முதல் பாகம் போல சூரியின் நடிப்பும் பிரமாதமாக உள்ளது. அது டிரெய்லரைப் பார்க்கும்போதே தெரிகிறது.

viduthalai 2

விஜய் சேதுபதி ‘கருப்பனுக்கு சாவே இல்லடா’ன்னு பொங்கி எழுகிறார். முதல் பாகத்தில் புலி பதுங்குனது இரண்டாம் பாகத்தில் பாய்வதற்குத் தான் என்று நிரூபித்து விட்டார். இன்று நடந்த பாடல் மற்றும் வெளியீட்டு விழா விமரிசையாக நடந்தது. இந்தப் படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்.

வெற்றிமாறன் இயக்கத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பு எப்படி இருக்கும் என்றும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அவரது மேக்கப்பே வித்தியாசமாக உள்ளது. கிராமத்துப் பெண்மணி மாதிரி அப்படியே மாற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் படமும் ரசிகர்கள் மனதில் முதல் பாகம் போல நிலைத்து நின்று மாபெரும் வெற்றியைப் பெறும் என்றே தெரிகிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v