×

சூரிக்கு வந்த வாழ்வு பாருங்கப்பா! - பல மொழிகளில் உருவாகும் ‘விடுதலை’....

 
சூரிக்கு வந்த வாழ்வு பாருங்கப்பா! - பல மொழிகளில் உருவாகும் ‘விடுதலை’....

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது..  இப்படத்தில் சூரி காவல் அதிகாரியாகவும்,விஜய் சேதுபதி கைதியாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் கவுதம் மேனனும் நடிக்கவுள்ளார். எனவே, உஇப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏனெனில், விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி நடித்து வருவதால் அவருக்கு அங்கு மார்கெட் உள்ளது. எனவே, விடுதலை திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News