Categories: Cinema News latest news

என்னய்யா கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க.., இந்தா பாத்துக்கோங்க.! ஆதாரங்களை லீக் செய்த சேதுபதி.!

தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே தற்போது தேடப்பட்டு வரும் முக்கிய நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அவரது கால்ஷீட் எப்போதும் கிடைக்கும் என்று கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல இயக்குனர்கள் காத்து கிடக்கின்றனர். அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமை மூலம் இந்திய சினிமாவையே அதிர வைத்து வருகிறார்கள் செல்வன் விஜய் சேதுபதி.

அவர் எந்த சமயம் எந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது போல, அந்த அளவுக்கு பறந்து பறந்து மொழிகளை கடந்து நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து வந்த விடுதலை திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். அதன்படி ஷூட்டிங் நடைபெற்றது. அது நடைபெற்று கொண்டிருக்கும்போதே, படத்தின் கதைக்களம் பெரிதாகி தற்போது விஜய் சேதுபதியும் அதில் இன்னொரு நாயகனாக மாறிவிட்டார். அதற்கான ஷூட்டிங்கும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட வருடக்கணக்கில் இந்த சூட்டிங் சென்று கொண்டு இருக்கிறது. ஆதலால் இந்த ஷூட்டிங் எப்போதுதான் முடியுமோ, அந்த திரைப்படம் எப்போது முடித்து அடுத்ததாக வாடிவாசல் திரைப்படம் எப்பொழுது ஆரம்பமாகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதையும் படியுங்களேன் – கொலை முயற்சியா.?! கோபத்தில் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.! ஆடிப்போன கதிரேசன் – மீனாட்சி.!

இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக தற்போது விஜய்சேதுபதி விடுதலை சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதியை  போலீசாக இருக்கும் சூரி சுற்றிவளைக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருவதுபோல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் என பலர் இருக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளதால் விடுதலை திரைப்படம் இந்த மாதம் அல்லது ஜூன் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அதேபோல் ஜூலை மாதம் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan