மொழு மொழுனு இருந்த வித்யூலேகா இப்போ சிக்குனு மாறிட்டாங்க... வைராலாகும் லேட்டஸ்ட் கிளிக்

பிரபல நடிகர் ராமனின் மகள் வித்யூலேகா. நீதானே பொன் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர், புலி, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், ஜில்லா போன்ற பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை எக்கசக்கமாக கூடியது. நகைச்சுவைக்கு பெண் நடிகை இந்த தலைமுறையில் குறைவு என்பதால் வித்யூலேகாவிற்கு பெரிய இடம் கோலிவுட்டில் அமைந்தது.
அமுல்பேபி போல இருக்கும் வித்யூலேகா தனது எடையை சமீபகாலமாக குறைக்க போராடி வருகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் வெற்றி வித்யூலேகாவிற்கு கிடைத்து விட்டதாகவே கூறப்படுகிறது. மொழுமொழுவென இருந்த உடலை சிக்கென குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். இதன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
. Vidyuraman transformation pic.twitter.com/in4fVP1kgg
— Filmi Pedia (@filmipedia) February 5, 2021