Categories: Cinema News latest news

உனக்கு இது அடக்குமா தாயே!….பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் மோகன் ராமன். இவரின் மகள் வித்யூலேகா. நீதானே பொன் வசந்தம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர், புலி, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், ஜில்லா போன்ற பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடிகைகளின் தோழியாக நடித்தார். குணச்சித்திர வேடம் மட்டுமில்லாமல் காமெடியும் செய்வார். இதனால் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை எக்கசக்கமாக கூடியது. நகைச்சுவைக்கு பெண் நடிகை இந்த தலைமுறையில் குறைவு என்பதால் வித்யூலேகாவிற்கு பெரிய இடம் கோலிவுட்டில் அமைந்தது.

தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் இவர் நடித்துள்ளார். குண்டாக கொழுக் மொழுக் என இருந்த வித்யூலேகா தீவிர உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையையும் அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர் கடந்த 4ம் தேதி அவரின் பிறந்தநாள் ஆகும். எனவே, அன்று ஒரு ரெசார்ட்டுக்கு சென்று பிகினி உடையை அணிந்து அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா