×

மாமியாருக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்! கொண்டாட்டத்தில் நயன்தாரா வீடு...

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவரும் அறிந்த விஷயமே. பொது விழாக்களுக்கு கூட ஜோடியாக வளம் வந்தனர். பலருக்கும் மிகவும் பேவரைட்டான இந்த ஜோடி எப்போதுமே லைம்லைட்டில் இருப்பது வழக்கம்.

 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன் சமூக வளைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் இன்று அன்னையர் தினம் காரணமாக தனது தாய்க்கு வாழ்த்து சொல்லி அவர் பதிவிட்டிருந்தார். அடுத்து நடிகை நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டு அவரின் அம்மாவிடம் "அழகான குழந்தையை சிறப்பாக வளர்த்து இருக்கிறீர்கள். நன்றி அம்மா. அன்னையர் தின வாழ்த்துக்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்போது செம வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News