நயன்தாராவின் 4வது திருமண ஆண்டு கொண்டாட்டம்!.. வெளியான சூப்பர் போட்டோஸ்!..
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்று தங்களது 4-வது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய ஃபாரீன் டூர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
அந்த பதிவில், "Happy Anniversary to Us" என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகள் காதலித்து வந்த நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், 2022 ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் இந்திய திரையுலகில் மிகவும் பேசப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. பின்னர் வாடகைத் தாய் முறையின் மூலம் உயிர் மற்றும் உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை வரவேற்றனர்.
நடிகை நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல முக்கிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்க வைத்திருக்கும் அவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையும் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும், தற்போது நயன்தாரா பகிர்ந்துள்ள திருமண நாள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் "என்றும் இதேபோல் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள்" என்று அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் கடைசியாக பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்து அவர் யாரை வைத்து என்ன மாதிரியான படம் இயக்குவார் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
