×

கல்யாணம் பண்ன பணம் இல்ல.. அதான் சேர்த்துக்கிட்டு இருக்கோம்.. விக்னேஷு உனக்கு ரொம்ப நக்கலு...

 
nayanthara

போடா போடி படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அதன்பின் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

vignesh

படம் வெளியாகி 6 ஆண்டுகள் முடிந்த நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஜாலியாக இருந்து வருகிறார்கள். அதோடு, அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்று ஜோடியாக செல்பி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இளசுகளின் வயித்தெரிச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

vignesh

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களின் கேள்விகளுக்கு விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் ‘நயன்தாராவை எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?. ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொன்ன விக்னேஷ் சிவன் ‘திருமணத்திற்கு அதிக செலவாகும் புரோ. எனவே, பணத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறோம். அதோடு, கொரோனா பிரச்சனை முடியட்டும் என காத்திருக்கிறோம்’ என பதில் கூறினார்.

nayan

ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 5 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால், திருமணத்திற்கு பணம் சேர்த்துக்கொண்டிக்கிறோம் என பதில் கூறியிருப்பது சிரிப்பை வரவழைத்துள்ளது. ஒருவேளை நக்கலாக அவர் பதில் கூறினாரா என்பது தெரியவில்லை.

nayan

From around the web

Trending Videos

Tamilnadu News