Categories: Cinema News latest news

தோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்… இது தெறி மாஸ் அப்டேட்….

போடா போடி மூலம் இயக்குனரானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் நானும் ரவுடிதான். இப்படத்தின் வெற்றி அவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. இப்படத்தின் படப்பிடிப்பில்தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நானும் ரவுடிதான் படத்திற்கு பின் சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை இயக்கவுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனிக்கு பூங்கொடுத்து கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘எனது ரோல் மாடலை சந்தித்த போது நான் என்ன உணர்ந்தேன் என விவரிக்க முடியாது. என்னுடைய ஐகான். என் ஹீரோ. அவரை சந்தித்தது ஒரு அழகிய கதை. விரைவில் அவரை வைத்து ஆக்‌ஷன் சொல்லப் போகிறேன். இது நடப்பதற்கு காரணமாக இருந்த உலகுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

ஆனால், இது திரைப்படமா இல்லை விளம்பர படமா என்பது தெரியவில்லை. விக்னேஷ் சிவன் தோனியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா